ARTICLE AD BOX
பெங்களூருவில் போலி போலீசாக வலம் வந்து தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த கங்கா நகரைச் சேர்ந்தவர் பிஸ்டோ என்ற அடைமொழியில் அறியப்படும் ஆசிப் கான். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த இவர், பகுதி நேர ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். அதேநேரம், பொது இடத்தில் காதலர்கள் தனிமையில் இருப்பதை குறிவைக்கும் ஆசிப் கான், அங்கு போலீஸ் வேடத்தில் சென்று மிரட்டி பணம் பறிப்பதை தனது பார்ட் டைம் தொழிலாக மாற்றியுள்ளார்.
அந்த வகையில், கடந்த மார்ச் 5ஆம் தேதி ஆர்வி மெட்ரோ நிலையத்தின் அருகே ஒரு காரில் பெண் ஊழியர் ஒருவருடன், 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற ஆசிப் கான், அவர்களை மிரட்டியதோடு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர்களிடம் இருந்து 12 கிராம் தங்கச் சங்கிலி, 5 கிராம் தங்க மோதிரம் மற்றும் ஏடிஎம் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அவர் பல வருடமாக இதே போன்று செய்து வந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் அவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு ஆசிப் கைது செய்யப்பட்டு மீண்டும் பிணையில் வெளியே வந்ததம் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: நீதிமன்றத்தை நாடிய ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி…தீர்ப்பு யாருக்கு சாதகம்.!
மேலும், இவ்வாறு ஜாமீனில் வெளியே வந்த பிறகும், அவர் தொடர்ந்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 19-க்கும் மேற்பட்ட புகார்கள் அவர் மீது வரப் பெற்றுள்ளது. மேலும், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

7 months ago
82









English (US) ·