ARTICLE AD BOX
நீலகிரி மாவட்டம் உதகையில் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை ஒட்டி, பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்கள், மாணவ மாணவிகள் பேரணி நடத்தினர்.
இதனை துவக்கி வைத்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
இதையும் படியுங்க: அமித்ஷாவை சந்தித்த பாஜக பிரமுகர் திடீர் கைது : தொழிலதிபர் கொடுத்த பரபரப்பு புகார்!
அப்போது அவர் கூறியதாவது :- மழையின் தீவிரத்தை பொறுத்து முக்கிய சுற்றுலா தலங்கள் மூடுவது குறித்து அறிவிக்கபடும் என்றும் கனமழையை முன்னிட்டு 42 கண்காணிப்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அபாயகரமான இடங்களில் செல்லக்கூடாது என்றும் சுற்றுலா பயணிகள் கனமழையால் மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடாது அதனை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அபாயகரமான மரங்களின் கீழ் பகுதியில் வாகனங்களை நிறுத்தவும் நிற்கவும் கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர் இரண்டு நாள் ரெட் அலெட்டை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
