ARTICLE AD BOX
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வசூலை பார்த்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமம் ரூ.80 கோடிக்கு விலை போயுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பளத்தை ஏற்றிய ரஜினிகாந்த்?
“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ரஜினிகாந்த் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது “கூலி” திரைப்படத்தின் பிசினஸ் நன்றாக இருப்பதால் “ஜெயிலர் 2” திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் ரூ.250 கோடி சம்பளம் கேட்கிறாராம். இவ்வாறு அந்தணன் கூறியுள்ளார். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார். “கூலி” திரைப்படத்திற்காக ரஜினிகாந்தின் சம்பளம் ரூ.120 கோடியாக இருந்ததாம். இதனை தொடர்ந்து “ஜெயிலர் 2” திரைப்படத்தில் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை ரூ. 250 கோடி உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.