எங்க கூட்டணிக்கு விஜய் வந்தால் சிவப்பு கம்பளம் தயார்… பாஜக பகிரங்க அறிவிப்பு!

6 days ago 12
ARTICLE AD BOX

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்

மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதி வாரிய கணக்கென்த்து எடுக்கப்பட இருக்கிறது. இந்த பணியானது அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது.

இந்தியா வரலாற்றிலேயே முதல் ஓபிசி பிரதமர் நரேந்திர மோடி தான். இந்தியாவில் உள்ள மக்களின் அனைவரையும் நலனுக்காக அயராது ஓய்வின்றி நம் பாரத பிரதமர் பணியாற்றி வருகிறார்.

இன்றைய கால சூழலில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு தேவையான ஒன்று என்று அறிந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

உங்கள் அனைவருக்கும் தெரியும் DND பிரிவினரை குற்ற பரம்பரை என நீதி கட்சி ஆட்சியில் தான் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நீதி கட்சியிலிருந்து தோன்றிய திமுக இன்று இங்கு சமூகநீதி பற்றி பேசுகிறது.

காங்கிரசுடன் கைகோர்த்துள்ள திமுக அன்று மன்மோகன் சிங் ஆட்சியின்பது ஏன் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என குரல் கொடுக்கவில்லை ஜாதி வாரிய கணக்கெடுப்பை எடுக்கவில்லை.

அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தது போல அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் துவங்கி ஜாதி வாரிய கணக்கெடுப்பு முடிய ஒன்றை வருடம் ஆகும்.

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் சர்வே மெத்தடில் கண்மூடித்தனமாக ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதுபோல வெளிப்படை தன்மையில்லாமல் நிச்சயம் நாம் எடுக்கும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு இருக்காது. மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி துல்லியமாக கணக்கெடுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.

குரலை மட்டும் கொடுத்துக்கொண்டு காங்கிரசின் நிலைப்பாடு ஜாதிவாரிய கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்பதுதான். காங்கிரசுக்கு இன்று திடீரென சமூக நீதி அக்கறை வந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

அன்று காங்கிரஸ் ஐந்தாயிரம் கோடி செலவழித்து ஜாதி வாரி கணக்கெடுப்ப ஒதுக்கிய நிதி என்னானது என மக்கள் அறிவார். முறையான சமூக நீதியை கொண்டு வரவும் அனைவருக்கும் எல்லாம் முறையாக சென்றடையும் தான் ஜாதி வாரிய கணக்கெடுப்பு மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட உள்ளது.

ஜாதி வாரியா கணக்கெடுப்பதில் திருமாவளவன் நிலைப்பாடு என்னவென்று கூற வேண்டும். அவர் அதை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறாரா சும்மா கண் மூடி கால் முடித்தனமா அவர் பேசக்கூடாது. பட்டியல்இன மக்களுக்காக குரல் கொடுப்பவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

விஜய்யுடன் என் டி ஏ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என விஜய் உறுதியாக இருந்தால் பாஜகவிற்கு வரலாம் அவரை நாங்கள் வரவேற்கிறோம்.

If Vijay joins our alliance, the red carpet is ready… BJP

எல்லா கட்சியிலும் இளைஞர் அணி இருக்கும் ஆனால் விஜய் கட்சியில் குழந்தைகள் அணி பாபா அணிகள் தான் உள்ளது. கூட்டம் வேர ரசிகர் வேற அரசியல் அனுபவம் இல்லாததால் விஜய்க்கு அது புரியாது, தேர்தல் பிறகு புரிந்து கொள்வார்.
கமலஹாசனுக்கு கூட்டம் கூடவில்லையா.

84ல் கலைஞருக்கு கூட்டம் எம்ஜிஆரை விட அதிகம் கூடியது ஆனால் அந்த தேர்தலில் கலைஞர் தோற்றுப் போனார். திமுகவை வீழ்த்த வேண்டும் என ஒத்த சிந்தனையில் உள்ள அனைவரும் தாராளமாக NDA கூட்டணிக்கு வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?
  • Continue Reading

    Read Entire Article