எங்க தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- “குபேரா” படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம்!

1 week ago 14
ARTICLE AD BOX

கலவையான விமர்சனம்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “குபேரா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு அபாரமாக இருக்கிறது என்றாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சொதப்பிவிட்டார்கள் என படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு வரவேற்பு மிகவும் குறைந்துள்ளது. 

dhanush kuberaa movie first day collection report

வசூல் நிலவரம்

“குபேரா” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் இத்திரைப்படம் ரூ.13.5 கோடி வசூல் செய்துள்ளது. 

இத்திரைப்படம் தெலுங்கில் உருவாகியிருந்தாலும் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இவ்வாறு 5 மொழிகளில் வெளியாகியும் இந்திய அளவில் ரூ.13 கோடிகளையே இத்திரைப்படம் வசூல் செய்துள்ளது தனுஷ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

3 மணி நேரம் ஓடக்கூடிய இத்திரைப்படத்தின் நீளமும் இத்திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காததற்கான காரணங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது. 

  • dhanush kuberaa movie first day collection report எங்க தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- “குபேரா” படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம்!
  • Continue Reading

    Read Entire Article