ARTICLE AD BOX
நினைவுகளில் வாழும் வடிவேலு பாலாஜி
விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமான நகைச்சுவை கலைஞராக அறியப்பட்டவர் வடிவேலு பாலாஜி. வடிவேலு போலவே முக பாவனைகளும் உடல் மொழியும் கொண்டு பலரையும் வயிறு குலுங்க சிரித்த வைத்தவர் இவர். இவ்வாறு சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த வடிவேலு பாலாஜி கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மனைவியின் பெயர் ஜோதிலட்சுமி. இத்தம்பதிக்கு ஸ்ரீகாந்த் என்ற மகனும் ஸ்ரீதேவி என்ற மகளும் உள்ளனர்.

எங்க நிலைமை இப்படி ஆகிடுச்சு?
இந்த நிலையில் வடிவேலு பாலாஜியின் மகனான ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்தார். அதில் தனது தந்தை இறந்த பிறகு தனது குடும்பத்தில் சூழ்ந்த வறுமை குறித்து மனம் நொந்தபடி பகிர்ந்துகொண்டுள்ளார். “அப்பா இருந்தவரை எனக்கு கஷ்டம் என்றால் என்ன என்றே தெரிந்ததில்லை. இப்போது நான் நிறைய கஷ்டப்படுகிறேன். நான் ஒரு புது வண்டி எடுத்திருக்கிறேன். அப்பா இருந்திருந்தால் அவரே எடுத்துக்கொடுத்திருப்பார். இப்போது நான் அந்த வண்டிக்கு EMI கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

அப்பா இருந்திருந்தால் இந்த கஷ்டம் தெரிஞ்சிருக்காது. இப்போது கஷ்டம் தெரிகிறது. கஷ்டம் இல்லாமல் என்னை வளர்த்துவிட்டார். இப்போது என்னால் முடியவில்லை” என மிகவும் கவலையோடு பகிர்ந்துகொண்டுள்ளார். இவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
