ARTICLE AD BOX
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு
ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்த முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாற்று பாடத்தை சமீபத்தில் நீக்கியது. மேலும் மகா கும்பமேளா, மேக் இன் இந்தியா போன்றவற்றை குறித்த பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. NCERT-ன் இந்த முடிவால் நாடு முழுவதும் பல மக்கள் கொந்தளித்துப்போயினர். பலரும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எங்க வரலாறு எங்க?
“நான் பள்ளியில் படித்தபோது முகலாயர்கள் பற்றி 8 அத்தியாயங்கள் இடம்பெற்றிருந்தன. பிரிட்டிஷ் மற்றும் சுதந்திர போராட்டம் குறித்து நான்கு அத்தியாயங்களும் மொகஞ்சதாரோ ஹராப்பா பற்றி இரண்டு அத்தியாயங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் சோழர்கள், பாண்டியர்களை பற்றி ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
பிரிட்டிஷாரும் முகலாயர்களும் நம்மை 800 வருடங்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால் சோழர்கள் 2400 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்தனர். அவர்கள் வரலாறு எங்கே?
சமணம், பௌத்தம், ஹிந்து மதம் போன்றவை சீனாவிற்கு பரவியது. கொரிய மக்களின் மொழியில் பாதி தமிழ் இருக்கிறது. எங்கள் மொழி அவ்வளவு தூரம் சென்றுள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் ஒரே அத்தியாயத்தில் உள்ளது. இப்படிப்பட்ட பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாதவன் பேசிய இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

6 months ago
58









English (US) ·