ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கொடிக் கட்டி பறந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் அரசியலில் நுழைந்து அதிலும் வெற்றி பெற்று, பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவில் பார்த்து பார்த்து சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை
இருந்து மனம் தளராமல் தனுஷை வீல் சேரில் அமர்ந்தபடியே உலகை ரசிக்க வைத்தார், படிக்க வைத்தார், தற்போது திருமணமும் செய்து வைத்துள்ளார்.
ஒரு பெண்ணோட வாழ்க்கையை வீணாக்கிட்டீங்க என தனுஷ்ககு திருமணம் செய்து வைத்தது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தனுஷ்க்கு மனைவியாக வந்த அக்ஷயா, எதற்கும் சம்மதம் தெரிவித்து தான் வந்தார்.
விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் நெப்போலியன் குடும்பத்துடன் இணக்கமாக செயல்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நெப்போலியன் பதிவிட்ட குடுமப போட்டாக்கள், வீடியோக்களின் அக்ஷயா இல்லாததால், பலரும் பலவிதமாக பேச தொடங்கினர்.
அவரது மகன் தனுஷை, மாதம்பட்டி ரங்கராஜ் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலான போது, அருகில் அக்ஷயா இலலாததை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், தனுஷ் உடல்நிலை குறித்து விமர்சித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரு வீடியோவை பதிவிட்ட நெப்போலியன், எங்கள் வீட்டின் குலசாமி மீண்டும் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
நெப்லியன் குடும்பம் அக்ஷயாவை பூக்கள் தூவி வரவேற்றனர். மேலும் நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் காலில் விழுந்து அக்ஷயா ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் தனது கணவர் தனுஷை கட்டியணைத்து அன்பை பரிமாறினார்.
