ARTICLE AD BOX
கலவையான விமர்சனம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வலம் வருகிறது. இத்திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி திராபையாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா இடம்பெறும் சண்டைக் காட்சிகள் படு பயங்கரமாக இருந்தாலும் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை என்றும் சில விமர்சனங்கள் எழுகின்றன. எனினும் இத்திரைப்படத்தின் ஓபனிங் பிரம்மாண்டமாகவே இருந்தது. முதல் நாளிலேயே உலகமெங்கும் ரூ.28 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனதாக தகவல் வெளியானது.
இரண்டாவது நாள் வசூல்?
ஆனால் இரண்டாவது நாளில் மொத்தமாகவே ரூ.50 கோடிகள்தான் வசூல் ஆகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது நேற்று மட்டும் ரூ.22 கோடிகள்தான் வசூல் ஆகியுள்ளதாம். இது முதல் நாளை விட குறைவான வசூல் ஆகும். எனினும் இந்த வார இறுதி நாட்களில் ரசிகர்கள் அதிகளவு திரையரங்கங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.