ARTICLE AD BOX
ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு கிடையாது என திட்டவட்டமாக அதிமுக தெரிவித்துள்ள நிலையில், திமுக பக்கம் பிரேமலதா செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: அதிமுக தங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பிரேமலதாவுக்கு, “நாங்கள் அப்படி எதுவும் ஒப்பந்தம் போடவில்லையே..” என எடப்பாடி பழனிசாமி கூறியதும் திடுக்கென்றது என்பது தமிழக அரசியல் மேடையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எனவெ, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என திட்டவட்டமாகச் சொன்ன அதிமுக, அன்புமணியின் ராஜ்யசபா சீட்டுக்காக அணுகிய பாமகவுக்கு நல்ல பதிலைச் சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. இதனால், மக்களவைத் தேர்தலில் அதிமுகவை விட்டுவிட்டு பாஜக கூட்டணிக்குப் போன பாமகவிடம் குணமாக பேசுவதையும் காண முடிகிறது.
இந்த அரசியல் கணக்கைப் புரிந்துகொண்ட திமுகவை மெல்ல திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், பட்ஜெட் என அடுத்தடுத்து திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள பிரேமலதாவுக்கு, பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

அதேநேரம், அதிமுக தரப்பில் பாஜக, பாமக, தவெக, நாதக என பல கட்சிகளிடமும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, நாமும் கொஞ்சம் அரசியல் செய்தால்தான் நல்ல தொகுதிகளைப் பெறலாம் என்று நினைக்கிறார் பிரேமலதா.
இதையும் படிங்க: IPL கிங்குடா.!38 ரன் தான்..கோலி படைக்க இருக்கும் புது ரெகார்ட்.!
இதற்கேற்ப திமுகவும் தேமுதிக விஷயத்தில் கொஞ்சம் இறங்கிவந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, வடக்கிலும், தென் மாவட்டங்களிலும் தேமுதிகவுக்கு வாக்குவங்கி உள்ளது. எனவே, வட மாவட்டங்களில் பாமகவையும், தென் மாவட்டங்களில் பாஜகவையும் சமாளிக்க தேமுதிக உதவும் என திமுக கணக்கு போடுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதிமுக தர சம்மதிக்காத ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்க முன்வந்தால், பிரேமலதா கூட்டணி மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் முனுமுனுக்கப்படுகிறது. ஆனால், அடுத்த மார்ச் 18 அன்றே தேர்தல் கூட்டணி குறித்து கூறுவதாகவும் பிரேமலதா கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.
