ARTICLE AD BOX
திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.
இதையும் படியுங்க: புதிய வரலாறு படைத்த இந்திய அணி… 2வது டெஸ்ட் போட்டியில் சாதனை!
சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக்கழக மாநில இணை கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சியை சார்ந்த திருநங்கைகள் 10க்கு மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழக வெற்றி கழகத்தில் திருநங்கைகள் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து திருநங்கைகள் பேசும்போது, உலகத்தில் மிகவும் கொடுமையான விஷயம் ஒரு மனிதனைப் பார்த்து மற்றொரு மனிதன் அருவருப்புபடுவது அது எங்கள் வாழ்க்கையில் தினம் தினம் நடைபெற்று வருகிறது.
நீங்களும் மனிதர்கள் தான் உங்களுக்கும் இடம் தருகிறோம் கூறி தமிழக வெற்றி கழகத்தில் இணைத்ததற்கு நன்றி என தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.