ARTICLE AD BOX
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத்: இது தொடர்பாக நடிகை செளந்தர்யாவின் கணவர் ரகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரம் அற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன்.
மோகன் பாபு, எனது மனைவி மறைந்த சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை இங்கு உறுதிப்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நிலப் பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன் பாபுவை அறிவேன்.
இந்த நிலையில், உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நாங்கள் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்துகொள்கிறோம். இது ஒரு தவறான செய்தி என்பதால், இதனைப் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெலுங்கானா மாநிலம், கம்மம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசித்து வரும் எடுரு கட்லா சிட்டிபாபு என்பவர், நடிகை செளந்தர்யா திரைப்படத் துறையில் உச்சத்தில் இருந்தபோது, ஹைதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் 6 ஏக்கர் நிலத்தில் விருந்தினர் மாளிகை கட்டி இருந்தார்.
இதையும் படிங்க: மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!
தற்போதைய சந்தை மதிப்பில் அது 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். அந்த விருந்தினர் மாளிகையை தனக்கு விற்க நடிகர் மோகன் பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் அதற்கு மறுத்துவிட்டதாகவும், எனவே ஆத்திரமடைந்த மோகன் பாபு, நன்கு திட்டமிட்டு சௌந்தர்யாவையும், அவரது சகோதரர் அமர்நாத்தையும் கொலை செய்ததாக சிட்டிபாபு குற்றம் சாட்டி இருந்தார்.
