ARTICLE AD BOX
வேலூர் மாநகருக்கு உட்பட்ட காட்பாடி அடுத்த செங்குட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.
இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், எதிர்க்கட்சியாக இருக்கும்போது பெட்டிகளில் மனு வாங்கினார் பின்னர் எதுக்கு இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என கேள்வி எழுப்பியது குறித்து பேசிய அவர், அது மாதிரி பல மனுக்களை இப்போது வாங்குறோம் அதற்காகத்தான் உங்களுடன் ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளோம்.
சேலத்தில்? கருணாநிதி சிலை மீது கருப்பு மை பூசப்பட்டது குறித்து கேட்டதற்கு, யாரோ ஒரு காலி பையன் ஊத்தி இருக்கான் கருப்பு மையை ஊற்றி இருக்கான் என கூறினார்.

வேள்பாரி புத்தக நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில் இதற்கு முன்பு நிகழ்ச்சியில் நான் பேச வந்ததை மறந்து விட்டு பேசினேன் என சீனியர்கள் குறித்து விளக்கம் அளித்து இருந்தது பற்றி கேட்டதற்கு “(ரஜினிக்கே) அவருக்கே நான் போன் பண்ணி பேசினேன் “ரொம்ப தேங்க்ஸ் சார் இப்பவாவது மறக்காமல் பேசி இருக்கிறீர்களே என்று கூறினேன்.”

நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்துவிடுங்கள் என தவெக தலைவர் விஜய் போராட்டத்தின் போது பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, என் கேள்வி கேட்பதற்கு கூட அவர் வரமாட்டாரமா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது என கூறினார்.
