ARTICLE AD BOX
படுதோல்வியடைந்த “தக் லைஃப்”
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றது. “நாயகன்” திரைப்படத்திற்குப் பிறகு 37 வருடங்கள் கழித்து மணிரத்னம்-கமல்ஹாசன் இணைந்து பணியாற்றிய திரைப்படம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை இத்திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை.
 கதை, திரைக்கதை என எதிலும் சுத்தமாக சுவாரஸ்யமே இல்லை என ரசிகர்கள் விமர்சித்தனர். குறிப்பாக திரிஷாவின் கதாபாத்திரம் பலருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. ரூ.300 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெறும் ரூ.90 கோடிகளையே வசூல் செய்துள்ளது.
எங்களை மன்னிச்சிடுங்க
 இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் மணிரத்னம், “நாயகன் போன்ற படத்தை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இத்திரைப்படத்தை உருவாக்கவில்லை. ஆனால் ரசிகர்கள் நாயகன் போன்ற படத்தை எதிர்பார்த்தனர். இதற்காக நாங்கள் இருவரும் (மணிரத்னம், கமல்ஹாசன்) மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுள்ளார். “இவ்வளவு பெரிய இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?” என ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
                        4 months ago
                                45
                    








                        English (US)  ·