எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

2 weeks ago 16
ARTICLE AD BOX

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253 ஏக்கர் பரப்பில் பரப்பளவில் குப்பை கொட்டப்படுகிறது.

இதையும் படியுங்க: அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

குப்பை கிடங்கு வளாகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீப்பிடித்தது. இந்த தீயை மூன்று நாட்களுக்கு மேலாக போராடி தீயணைப்புத் துறை அனைத்தனர். இந்த ஆண்டு அதுபோன்ற தீ விபத்து ஏற்படாமல் இருக்க மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் எடுத்து வருகிறது.

Cbe Vellalore Fire Accident

இருந்த போதிலும் நேற்று பிற்பகல் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அப்பொழுது பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தீ விபத்து குறித்து அறிந்ததும் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் தற்காலிக தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது தவிர கோவை தெற்கு தீயணைப்பு நிலையம், பீளமேடு, கணபதி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு. தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடந்தது.

தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்து மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உட்பட அதிகாரிகள் பலரும் குப்பை கிடங்கிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தீயை அணைக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

இது குறித்து ஆணையாளர் குரு பிரபாகரன் கூறும்போது வெள்ளலூர் கிடங்கில் சுமார் 3 ஏக்கர் தரப்பில் குவிந்திருந்த குப்பைகளால் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து தீயணைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

தீயணைக்கும் பணியை தீயணைப்பு வாகனங்கள், 30 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர் என்றார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. இந்த குப்பை கிடங்கு சுற்றி 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆயிரக் கணக்கான குடும்பங்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு ஏற்படும் தீ விபத்தால் உண்டாகும் புகையால் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் புகை மூட்டத்தால் மகாலிங்கபுரம், கோணவாய்க்கன்பாளையம், வெள்ளூர் ஆகிய பகுதிகளில் காற்று மாசுபடுவதுடன் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளை பயோ மைன்டின் முறையில் விரைந்து அழித்து, குப்பை கிடங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறினார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…
  • Continue Reading

    Read Entire Article