எனக்கு இந்த ரோல் வேண்டாம், Bye- லோகேஷ் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்த ஃபகத் ஃபாசில்?

1 month ago 32
ARTICLE AD BOX

Fa Fa

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபகத் ஃபாசில். இவர் தமிழில் “வேலைக்காரன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் “சூப்பர் டீலக்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஃபகத் ஃபாசில் நடித்தார். 

இந்த நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தும் அவர் வேண்டாம் என்று மறுத்திவிட்டதாக ஒரு தகவல் வெளிவருகிறது. 

கூலி படத்துக்கு No சொன்ன ஃபகத் ஃபாசில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் (சிறப்பு தோற்றம்) உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தில் சௌபின் சாஹிர் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஃபகத் ஃபாசிலைத்தான் படக்குழுவினர் அணுகினார்களாம். ஆனால் அந்த சமயத்தில் “மாரீசன்” படத்தின் கதையை கேட்டிருந்தாராம். “கூலி” படத்தை விட “மாரீசன்” படத்தில் அவரது கதாபாத்திரம் அவருக்கு பிடித்திருந்ததாம். ஆதலால் “மாரீசன்” திரைப்படத்திற்கு ஃபகத் ஃபாசில் ஒப்புக்கொண்டாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது. இதற்கு முன் “வேட்டையன்” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Fahadh faasil said no to coolie movie 

ஃபகத் ஃபாசில்-வடிவேலு இணைந்து நடித்துள்ள “மாரீசன்” திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

  • Fahadh faasil said no to coolie movie  எனக்கு இந்த ரோல் வேண்டாம், Bye- லோகேஷ் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்த ஃபகத் ஃபாசில்?
  • Continue Reading

    Read Entire Article