ARTICLE AD BOX
ஐபிஎல் போட்டியில் நேற்று வெகு நாள் கழித்து சென்னை அணி வெற்றியை ருசிபார்த்தது. நேற்று சென்னை அணி லக்னோ அணியுடன் மோதியது.
இதில் முதலிடல் பேட்டிங் செய்த லக்னோ அணி, 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 வயதே ஆன ஷேக் ரசீதை களமிறக்கினர்
இதையும் படியுங்க: 23 வருஷம் ஆகிடுச்சு, எப்படி மறக்கமுடியும்?- சிம்ரன் மனசுல இப்படி ஒரு துயரமா? அடப்பாவமே!
துடிப்பான ஆட்டத்தால் சென்னை அணி பவர் பிளேயில் றந்து விளங்கியது. தொடர்ச்சியாக விக்கெட் சரிந்தாலும், தூபோ – தோனி இணை வெற்றிக்கு வித்திட்டது. 19.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
இதையடுத்து ஆட்ட நாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. 43 வயதில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். ஆனால் அவர் விருதை வாங்கியது மட்டுமல்லாமல், எனக்கு எதுக்கு இந்த விருதை கொடுத்தார்கள் என தெரியவில்லை என கூறியுள்ளார்.
ரன் அவுட், ஸ்டம்பிங், ரன்குவிப்பு என்ற அடிப்படையில் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் தோனி பேசியது, இந்த விருதை நூர் முகமதுவுக்கு கொடுத்திருக்க வேண்டும், 4 ஓவர் வீசி வெறும் 13 ரன் தான் விட்டுகொடுத்திருந்தார் எனக்கு ஏன் இந்த விருதை கொடுத்தார்கள் என தெரியவில்லை என கூறினார்.