எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!

2 weeks ago 22
ARTICLE AD BOX

அனிருத்-காவ்யா மாறன் காதல்?

தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”, “ஜெயிலர் 2”, கமல்ஹாசனின் “இந்தியன் 3”, சிவகார்த்திகேயனின் “மதராஸி” போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் அனிருத்தும் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. 

anirudh open statement about his marriage with kavya maran

இருவரும் அடிக்கடி டேட் செய்து வருகிறார்கள் எனவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அனிருத்தோ அல்லது காவ்யா மாறனோ திருமண விஷயம்  குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இவர்களின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் இருவரும் இதற்கு மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. ஆதலால் இச்செய்தி உண்மைதான் என பலரும் நம்ப வழி வகுத்தது. இந்த நிலையில்தான் தற்போது அனிருத் தனது திருமணம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமணம் குறித்து அனிருத்தின் டிவிட்

காவ்யா மாறனுடன் திருமணம் நடைபெறப்போவதாக செய்திகள் பரவி வரும் நிலையில் தனது எக்ஸ் தளத்தில்  இது குறித்து பகிர்ந்துள்ள அனிருத், “எனக்கு திருமணமா? Lol… Chill பண்ணுங்க Guys, தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்” என கூறியுள்ளார். இதன் மூலம் தனக்கும் காவ்யா மாறனுக்கு இடையே காதலோ? திருமணமோ? எதுவும் இல்லை என இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻

— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025
  • anirudh open statement about his marriage with kavya maran எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!
  • Continue Reading

    Read Entire Article