ARTICLE AD BOX
குடும்பங்கள் கொண்டாடிய தலைவன் தலைவி!
பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் “தலைவன் தலைவி” இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். கணவன் மனைவியிடையே உள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி மிகவும் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் தற்போது வரை ரூ.75 கோடிகளுக்கு மேல் வசூலாகியுள்ளது.

பாண்டிராஜுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே மோதல்
இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாண்டிராஜ், “விஜய் சேதுபதியுடன் பணியாற்றவே கூடாது என்ற முடிவில் இருந்தேன். இருவருக்குமிடையே பல ஆண்டுகள் பிரச்சனை இருந்தது” என கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
“எனக்கும் பாண்டிராஜுக்கும் சண்டையா? என கேட்கிறார்கள். எனக்கும் அவருக்கும் இடையே முட்டல் மோதல் இருந்தது உண்மைதான். எல்லாம் வேலை சம்பந்தப்பட்டதுதான். ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. சினிமாவில் இதெல்லாம் சகஜம், இது பெரிய விஷயமே கிடையாது” என பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
