ARTICLE AD BOX
டைரக்டர் டூ வில்லன்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. “வாலி”, “குஷி”, “நியூ”, “அன்பே ஆருயிரே” போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தான் இயக்கிய “நியூ” திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா ஒரு கட்டத்திற்கு பிறகு வில்லனாக நடிக்கத் தொடங்கினார்.
இயக்குனர், ஹீரோ ஆகிய அவதாரங்கள் அவருக்கு கைக்கூடாத நிலையில் வில்லன் அவதாரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடிக்கத் தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது “LIK”, “இந்தியன் 3” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3 காதலிகளுக்கு நன்றி
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “எனக்கு மூன்று காதல்கள் இருந்தது. நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பார்கள். எனக்கு மூன்று சூடுகள் பட்ட பிறகுதான் இனி காதலிக்கக்கூடாது என்று உணர்ந்தேன். நான் எதிலாவது கமிட் ஆகியிருந்தால் என்னுடைய சுதந்திரம் பறிபோயிருக்கும். அதனால் என்னுடைய மூன்று காதலிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா இவ்வாறு பேசியது வைரல் ஆகி வரும் நிலையில் இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

5 months ago
63









English (US) ·