ARTICLE AD BOX
ஹிட் அடித்த ஹிட் 3
தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் “ஹிட்:The Third Case”. இதற்கு முன் வெளிவந்த “ஹிட்” திரைப்படங்களின் இரண்டு பாகங்களும் வேற லெவல் ஹிட் அடித்த நிலையில் நானியின் நடிப்பில் வெளியான “HIT:The Third Case” ரூ.65 கோடி பொருட்செலவில் படமாக்கப்பட்டு ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இத்திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் மிக அதிகமாக இடம்பெற்றிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்திரைப்படத்தை பிரஷாந்தி திபிர்னேனி, நானி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து நானி “பேரடைஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வழக்கில் சிக்கிய ஹிட் 3
இந்த நிலையில் எழுத்தாளர் சோனியா விமல் என்பவர் “ஹிட் 3 திரைப்படத்தின் கதை கருவும் நான் எழுதிய ஏஜென்ட் V கதையின் கருவும் ஒன்றுதான்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து ஜூலை 7 ஆம் தேதிக்குள் ஹிட் 3 படக்குழுவும் நெட்பிலிக்ஸ் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஏஜென்ட் V என்ற கதையை எழுதிய சோனியா விமல் நானியின் தீவிர ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.