என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது, ஜெய் ஹனுமான் தெரியும் : நடிகை நமீதா பெருமிதம்!

1 week ago 19
ARTICLE AD BOX

11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர். சிறப்பாக யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்க: விஜய் சின்ன பச்சா… சுறாவா இல்ல சின்ன இறாவானு 2026 தேர்தலில் தெரியும் : பிரபல நடிகர் கிண்டல்!!

பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசைசௌந்தர்ராஜன் பேசுகையில், இன்று உலகம் முழுவதும் 170 நாடுகளில் கொண்டாட பாரத பிரதமரே காரணம் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். யோகா செய்தால் மகிழ்ச்சி உண்டாகும், வாழ்வை மேம்படும். டிசம்பர் 21 தியான தினமாக கொண்டாட வேண்டும் என மோடி கூறியுள்ளார். நம் அனைவரின் நோக்கமும் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் என கூறினார்.

பின்னர் நமீதா பேசுகையில், யோகா 5 ஆயிரம் வருடம் பழசு. 2007 ல் பாலிவுட் நாயாகி கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாடோடு வைத்த பின் தான் அனைவருக்கும் தெரிய வந்தது.

ஆங்கிலம் தெரிந்தல் நல்லது தான் ஆனால் அதற்கு முன் கண்டிப்பா தாய்மொழி தான் முக்கியம். என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும் ஏனென்றால் இது அவர்கள் தாய்மொழி. என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது ஆனா கண்டிப்பா ஜெய் அனுமான் தெரியும். என் குழந்தைகளுக்கு அனுமான் ரொம்ப இஷ்டம் இதை நான் பெருமையா தெரிவித்துக் கொள்கிறேன். என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை என் தாய் மொழியில் தான் பேசுகிறேன் என பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், யோகா மிக பழமையானது ஆனா கடந்த 10 ஆண்டாகத்தான் பிரபலமாகி வருகிறது அது ஏன்னு தெரியலை. மேலும் என் குழந்தைகளுக்கு நான் யோகா, சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்கிறேன். நான் யோகா செய்தது கிடையாது ஏன்னா என் பெற்றோருக்கு அது பத்தி தெரியலை. தெரிந்திருந்தா உடலை பிளக்ஸிபலாக வைத்திருப்பேன். ஆனா ஜிம் போறோன். எனது கணவர் நன்றாக யோகா செய்வார் என கூறினார்.

  • blue sattai maran troll dhanush for speak like rajinikanth தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…
  • Continue Reading

    Read Entire Article