என் கூட சென்னைக்கு வர்ரியா? பூனையை மடியில் வைத்து கியூட்டாக கொஞ்சிய அஜித்- வைரல் வீடியோ

1 month ago 27
ARTICLE AD BOX

ரேஸர் அஜித்குமார்

பல உலக நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் அஜித்குமாரின் அணி, பல சர்வதேச கோப்பைகளையும் வென்று வருகிறது. வருகிற நவம்பர் மாதம் மீண்டும் சினிமாவிற்கு திரும்பும் அஜித்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணையவுள்ளதாக கூறுகின்றனர். நவம்பர் மாதத்திற்கு பிறகு அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அஜித்குமாரின் நியூ லுக்

அஜித்குமார் தற்போது மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். கார் பந்தயங்களில் கலந்துகொள்வதற்காக தனது உடல் எடையை அஜித்குமார் குறைத்துள்ளார் என கூறப்படுகிறது. 

பூனையுடன் கொஞ்சிய அஜித்குமார்

இந்த நிலையில் பூனையுடன் அஜித்குமார் கொஞ்சிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பூனையை தனது மடியில் வைத்துக்கொண்டு “என்னுடன் சென்னைக்கு வருகிறாயா?” என கேட்டு கொஞ்சுகிறார். பூனை அஜித்தின் கையிடுக்கில் முகத்தை புதைத்துக்கொள்கிறது. இந்த கியூட் வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

#AjithKumarRacing 😍 THALA Ajith Kumar Anana 😍 pic.twitter.com/vRRPPQJHH5

— THALA EDITOR ᴿᵉᵈ dragon 🐉 (@THALAEDITOER) July 13, 2025
  • Ajith kumar cat viral videoஎன் கூட சென்னைக்கு வர்ரியா? பூனையை மடியில் வைத்து கியூட்டாக கொஞ்சிய அஜித்- வைரல் வீடியோ
  • Continue Reading

    Read Entire Article