என் படத்தை பார்த்துட்டு அந்த இயக்குனர் ஓங்கி அடிச்சாரு- சேரன் சொன்ன தரமான சம்பவம்!

3 months ago 39
ARTICLE AD BOX

தவமாய் தவமிருந்து 

சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”. இதில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் பத்மபிரியா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் குடும்ப நலன் சார்ந்த பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சேரன், இத்திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

bharathiraja beat the seat in angry while watching cheran movie

ஓங்கி அடித்த இயக்குனர்

இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு நாள் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன் ஆகிய நான்கு இயக்குனருக்கும் இத்திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினாராம். படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறார்களோ என்ற பதட்டத்தில் இருந்தாராம் சேரன்.

படம் முடிவடைந்த பிறகு நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்களாம். பத்து நிமிடம் கழித்து பாரதிராஜா, தான் அமர்ந்திருந்த இருக்கையை ஓங்கி அடித்து, “ச்சே, இப்படி ஒரு படம் நம்ம டைரக்ட் பண்ணாம விட்டுட்டோமே” என்றாராம். 

bharathiraja beat the seat in angry while watching cheran movie

அதன் பின்னும் சில நிமிடங்கள் நால்வரும் மௌனமாக இருந்தார்களாம். அதன் பிறகு பின்னால் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த சேரனை அருகில் அழைத்து நால்வரும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார்களாம். இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் சேரன். 

  • bharathiraja beat the seat in angry while watching cheran movie என் படத்தை பார்த்துட்டு அந்த இயக்குனர் ஓங்கி அடிச்சாரு- சேரன் சொன்ன தரமான சம்பவம்!
  • Continue Reading

    Read Entire Article