ARTICLE AD BOX
தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி தலைமை தாங்கினார்.வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், ம.க.ஸ்டாலின், ஆறுமுகம், வேணு பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படியுங்க: அன்புமணியை அவதூறாக பேசிய மாஜி பாமக எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாமக கூட்டத்தில் தீர்மானம்!
முன்னதாக ஜி.கே.மணி பேசியதாவது:- பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் 7 நாட்கள் சாலை மறியல் போராட்டம், தேர்தல் புறக்கணிப்பு, என தமிழகத்தில் எண்ணற்ற போராட்டத்தில் தலைமை தாங்கியவர்.
கும்பகோணத்தில் 6 நகராட்சி உறுப்பினர்கள் பா.ம.க.வில் இருந்தனர். ஆனால் தற்போது நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பா.ம.க.வெற்றி பெற முடியவில்லை மிகப்பெரிய வருத்தம் உள்ளது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாற்பது தொகுதிகளை பா.ம.க. வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பலமும் பா.ம.க சக்தி மிக்கவர்களாக மாற்றி விடலாம்.
தேர்தல் வேலைகளை மட்டும் செய்யுங்கள் மற்றதை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பார்த்து கொள்வார். வருகிற ஆகஸ்ட் 10ந்தேதி வன்னியர் மகளிர் மாநாடு நடைபெறுகிறது இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு மாநாடு வெற்றி பெற வேண்டும் என பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:- மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் பா.ம.க. பயிற்சி அளிக்கிறது.
மக்கள் மனநிறைவோடு வாழ முடியவில்லை அதனால் தான் தமிழகத்தில் பா.ம.க போராடி வருகிறது. வனவாசம் போகும் பொழுது செந்தாமரை போன்ற ராமரின் முகம் இருந்ததை போன்று தற்போது உள்ளது.
செயல் தலைவர் என்று தான் சொல்கிறோம். என் பெயர் போடக்கூடாது என்னுடைய முதல் எழுத்து மட்டும் போட்டு கொள்ள உரிமை உள்ளது.
கிராம கிராம செல்லுங்கள் என்று தான் சொல்கிறோம். கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஆன்மிக தலமாக விளங்கும் இலவச ஆன்மிக சுற்றுலா ஏற்படுத்த வேண்டும். மதுபான கடைகளை அகற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.