என் மூஞ்சி..என்ன வேணா பண்ணுவன்..பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பிரபல நடிகை பளார்.!

4 hours ago 4
ARTICLE AD BOX

ஸ்ருதி ஹாசனின் கருத்து

சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.பல முன்னணி நடிகைகள் தங்களது தோற்றத்தை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் விஷயம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்க: அப்பாவுக்கு வேற பிரச்சனை…ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் பதிவு..!

இந்த நிலையில்,நடிகை ஸ்ருதி ஹாசன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது குறித்து தனது அனுபவத்தையும்,கருத்துகளையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
ஒரு பழைய நேர்காணலில் அவர் பேசும்போது,தனது மூக்கில் ஏற்பட்ட எலும்பு மாற்றம் காரணமாக ரைனோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறியிருந்தார்.இதை அழகிற்காகச் செய்திருந்தாலும்,அதை மறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்,இதை வெட்கப்பட வேண்டிய விஷயமாகக் கருதவோ,நியாயப்படுத்த தேவையில்லை.இது என் வாழ்க்கை,என் முகம்,ஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன்.அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும்,பெண்களின் அழகு குறித்த சமூக அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில்,பிளாஸ்டிக் சர்ஜரியை நான் ஆதரிக்கவோ,எதிர்க்கவோ செய்யவில்லை என்றும்,இது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட தேர்வாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Shruti Haasan Plastic Surgery என் மூஞ்சி..என்ன வேணா பண்ணுவன்..பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பிரபல நடிகை பளார்.!
  • Continue Reading

    Read Entire Article