என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

4 weeks ago 18
ARTICLE AD BOX

வெளியானது குட் பேட் அக்லி…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஆரவாரமாக இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் காட்சியை பார்த்த பலரும் “ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

sincere thanks to ajith kumar sir shared by arjun das

இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்துள்ளார். இவரது வில்லனிசம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர். இதுவரை ரசிகர்கள் பார்த்திடாத ஒரு அர்ஜுன் தாஸை இத்திரைப்படத்தில் பார்க்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அஜித்திற்கு நன்றி கூறும் வகையில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு நன்றி…

“திரைப்படங்களுக்காக புரொமோஷன் செய்யும் D’one என்ற நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்து அஜித் திரைப்படங்களுக்காக மார்க்கெட்டிங் மற்றும்  புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பிற்காலத்தில் அஜித் சாருடன்  நடிப்பேன் என நான் அன்று நினைத்ததே இல்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து இன்று அது நடந்தேவிட்டது” என அந்த பதிவில் கூறியிருந்த அர்ஜுன் தாஸ்,

“என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அஜித் சார். இது எனக்கு மிகப்பெரிய கௌரவம். படப்பிடிப்பு தளத்தில் உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளையும் நான் நினைவுகளாக பாதுகாத்துக்கொள்வேன், நீங்கள் கொடுத்த அன்பு, நீங்கள் அடித்த ஜோக், நீங்கள் கொடுத்த அறிவுரை என எல்லாவற்றையும். மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என நம்புகிறேன். அஜித் ரசிகர்களே, நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கு மிக்க நன்றிகள். ஆதிக் ரவிச்சந்திரன் அண்ணனுக்கு எனது அடிமனதில் இருந்து நன்றிகள்” என அப்பதிவில் உருக்கமான பகிர்ந்துகொண்டுள்ளார். 

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்
  • Continue Reading

    Read Entire Article