ARTICLE AD BOX
மனம் உடைஞ்ச சல்மான்கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். 1998-ம் ஆண்டு மான் வேட்டை வழக்கு காரணமாக அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
இதையும் படியுங்க: அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!
மான் வேட்டை வழக்கு மற்றும் பிஷ்னோய் சமூகத்தின் எதிர்ப்பு
1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் படப்பிடிப்பு சென்றபோது,கருப்பு மான் வேட்டையாடியதாக சல்மான் கானுக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றம் அவரை விடுவித்தாலும்,பிஷ்னோய் சமூதாயம் இதை எப்போதும் மறக்கவில்லை.
பிஷ்னோய் மக்கள் கருப்பு மானை தெய்வமாகக் கருதி வழிபடுவதால், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி,அவரை கொலை செய்ய மிரட்டல் விடுக்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்,மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு முன்பு,லாரன்ஸ் பிஷ்னோயியின் கூட்டாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த சம்பவத்தால் மகாராஷ்டிரா அரசு சல்மான் கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியது.தற்போது அவரது படப்பிடிப்புகளும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மட்டுமே நடைபெறுகிறது.
இந்த சூழலில்,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்,சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள “சிக்கந்தர்” திரைப்படம் ஜூலை 30-ம் தேதி வெளியாக உள்ளது.
மும்பையில் நடந்த பட விழாவில் பிஷ்னோய் கேங் மிரட்டல் குறித்து கேட்டபோது,சல்மான் கான் தனது மவுனத்தை முறித்தார்.
“எல்லாம் கடவுள் கையில் இருக்கிறது.என்ன நடக்கப் போகிறதோ,அது தான் நடக்கும்.கடவுள் (அல்லா) பார்த்துக்கொள்வார்…” என அவர் கூறியுள்ளார்.
இந்த பதிலால் சல்மான் கானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இன்னும் தொடர்ந்து வரலாம் என்பதும் உறுதியாகிறது.அவரின் வாழ்க்கை மற்றும் திரைப்படப் பயணம் இன்னும் பல சவால்களை சந்திக்க நேரிடலாம்

7 months ago
72









English (US) ·