ARTICLE AD BOX
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகின்றார்.
இந்த கடையில் பாஸ்கரன் என்பவர் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்த நிலையில் பாஸ்கரனுக்கும் கடை உரிமையாளர் சுரேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஸ்கரனை வேலைக்கு வர வேண்டாம் என சுரேஷ் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கரன் அவர் தங்கியிருந்த அறையில் காலை முதலே மது அருந்தி கொண்டு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுரேஷ் தனதுச லூன் கடைக்கு வட மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்களை புதிதாக வேலை சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் வட மாநில இளைஞர்கள் இரண்டு பேரையும் பாஸ்கரன் உங்களால் தான் என்னுடைய வேலை போனதாக கூறி கத்தியை எடுத்து தாக்கி உள்ளார்.
இதில் காயமடைந்த இரண்டு இளைஞர்களையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சலூன் கடை உரிமையாளர் சுரேஷ் தனது கடையில் வேலை செய்து வந்த பாஸ்கரனை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாலும் புதிதாக கடைக்கு இரண்டு வட மாநில இளைஞர்களை பணிக்கு அமர்த்தியதால் கோவம் அடைந்த பாஸ்கரன் மது போதையில் கத்தியால் கொலை செய்ய முயன்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
