ARTICLE AD BOX
சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர் ஒருவர், வாழ்க்கையில் எல்லோருக்கு அம்மா அப்பா முக்கியமானவங்களாக இருப்பாங்க. அப்படி எனக்கு யாரு இல்ல, சின்ன வயசுல என்னை பலர் தவறா பயன்படுத்தினாங்க என கதறி அழுது பேசினார்.
இதையும் படியுங்க: ஜனநாயகனை கைப்பற்றி ஜாக்பாட்.. பல கோடிகளுக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!
இதைக் கேட்ட வரலட்சுமி சரத்குமார், உங்க வாழ்க்கையில் நடந்தது தான் எனக்கும் நடந்திருக்கு, என்னுடைய சின்ன வயசுல என் பெற்றோர்கள் அவங்க வேலை தான் முக்கியம்னு மத்தவங்க வீட்டில் என்னை விட்டுட்டு போய்டுவாங்க.
அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசுதான்.. இதை பயன்படுத்தி என்கிட்ட நிறைய பேரு தப்பா நடந்துகிட்டாங்க. எல்லாருக்கு நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான், குட் டச், பேட் டச் எதுனு குழந்தைங்க கிட்ட கண்டிப்பா சொல்லி கொடுங்க என அழுதபடியே பேசினார்.

இது தொடர்பான வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர், நடிகரின் மகளுக்கே இந்த நிலைமையா என பல்வேறு விதமான கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
