என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

1 week ago 8
ARTICLE AD BOX

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன்

தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது “குபேரா” படத்தில் நடித்து வருவதோடு, “இட்லி கடை” என்ற புதிய படத்தையும் இயக்கி நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

இந்நிலையில்,பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் “ஆடுகளம்” படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியது,வெற்றிமாறன் இயக்கிய “ஆடுகளம்” படத்தில்,பேட்டக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன்.ஆனால்,நான் சீனியர் என்பதால் தனுஷ் என்னுடன் நடிக்க தயங்குவதாக செல்வராகவன் கூறினார்.இதனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

Parthiban on Aadukalam role

இதே மாதிரி நானும் ஒரு சம்பவம் செய்தேன் அதாவது,புதிய பாதை படம் வெளியானபோது,இயக்குநர் ஶ்ரீதர் என்னை அவர் படத்தில் நடிக்க அழைத்தார்.இந்தியில் அதே கதையில் ஷாருக் கான் நடிக்க இருந்தார்.தமிழில் என்னை தேர்வு செய்திருந்தார்கள்.ஆனால்,ஶ்ரீதர் சார் ஒரு மிகுந்த டிஸிப்ளைன் கொண்ட இயக்குநர் என்பதால்,அவருடைய படத்தில் நடிக்க பயந்துவிட்டேன்.அதனால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன்.அதையே ஆடுகளம் படத்தில் நான் அனுபவித்தேன் என கூறியிருப்பார்.

இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆடுகளம்” படத்தில் பார்த்திபன் நடித்திருந்தால்,படம் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
  • Continue Reading

    Read Entire Article