என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

5 hours ago 2
ARTICLE AD BOX

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் இவர்களுடன் திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

a scene leaked in internet from thug life movie

இத்திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற “ஜிங்குச்சா” என்ற பாடல் சிங்கிள் பாடலாக வெளிவந்த நிலையில் தற்போது இப்பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வீரியமான சண்டை காட்சி

அதாவது இத்திரைப்படத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் சண்டையிடுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம். இதில் சிம்புவும் கமல்ஹாசனும் ஒருவருக்கொருவரின் கழுத்தை மாறி மாறி நெரித்து கொலை செய்ய முயல்வது போன்ற ஒரு காட்சி இதில் இடம்பெற்றுள்ளதாம். 

இத்திரைப்படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது இருவரும் இத்திரைப்படத்தில் நெருக்கமான நட்புடையவர்களாக நடித்துள்ளதாக தென்பட்டது. ஆனால் படத்தில் இருவருக்கும் இடையே ஒரு வீரியமான சண்டைக் காட்சி ஒன்று இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் இத்திரைப்படத்தின் மீதான் ஆர்வத்தை தூண்டிவுள்ளது. 

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?
  • Continue Reading

    Read Entire Article