ARTICLE AD BOX
ரசிகர்களுக்கான திரைப்படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் திருப்திகரமான திரைப்படமாக அமைந்துள்ளது. “இது முழுக்க முழுக்க அஜித் ஃபேன்ஸிற்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம்” என அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் “குட் பேட் அக்லி” திரைப்படமாவது சிறப்பாக அமையுமா என அஜித் ரசிகர்கள் ஏங்கிக் காத்துக்கொண்டிருந்தனர். அந்த ஏக்கத்தை ஆதிக் ரவிச்சந்திரன் பூர்த்தி செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.
ஜாலியான அஜித்
“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல இடங்களில் அஜித்குமார் ஜாலியான தோற்றத்தில் வருவதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை பார்த்த அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரனிடம் தனது கருத்தை கூறிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபுவுக்கு அப்புறம் நீதான்!
ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்காக பிரத்யேகமாக “குட் பேட் அக்லி” திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினாராம். அஜித் படம் பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாரோ என்று ஆதிக் பயத்துடனே வெளியே நின்றுக்கொண்டிருந்தாராம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அஜித்குமார் ஆதிக்கின் தோள் மேல் கைப்போட்டு, “வெங்கட் பிரபுவுக்கு பிறகு என்னை இவ்வளவு ஜாலியாக என்னை திரையில் காண்பித்தது நீதான்” என பாராட்டினாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

6 months ago
76









English (US) ·