ARTICLE AD BOX
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்…
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும் புதுமையான கதைக்களத்தோடு அட்டகாசமான திரைக்கதையோடு யதார்த்தமான கதைச்சொல்லல்லாக இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. கோலிவுட்டில் ஒரு கல்ட் சினிமாவாக திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.
இத்திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷிற்கு கிடைத்தது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது ஆகிய இரண்டு விருதுகளை வெற்றிமாறன் பெற்றார். மேலும் சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை கிஷோர் பெற்றார். “ஒத்த சொல்லால” என்ற பாடலுக்காக சிறந்த நடன அமைப்பிற்கான தேசிய விருதை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் குமார் பெற்றார். சிறப்பு நடுவர் விருதை நடிகர் ஜெயபாலன் (பேட்டக்காரன்) பெற்றார். இவ்வாறு இத்திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தன.
எனக்கு மட்டும் தேசிய விருது கிடைக்கல..
இந்த நிலையில் “ஆடுகளம்” திரைப்படத்தின் கதாநாயகியான டாப்சி சில வருடங்களுக்கு முன்பு விகடன் விருது விழாவில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “நான் வெற்றிமாறன் அவர்களுக்கு சொல்ல நினைப்பது என்னவென்றால், என்னை தவிர எல்லாரும் தேசிய விருது வாங்கிவிட்டார்கள். எனக்கு இன்னும் பாக்கி உள்ளது சார். உங்களது திரைப்படத்தில் நடிப்பதற்கான தகுதி இப்போது வந்துவிட்டதாக நான் நம்புகிறேன். என்னை சினிமாவுக்கு அழைத்து வந்ததற்கு நன்றி வெற்றிமாறன் சார்” என்று புன்னகையோடு கூறினார். இந்த விழாவில் வெற்றிமாறனும் அமர்ந்து டாப்சியின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தார்.

6 months ago
54









English (US) ·