ARTICLE AD BOX
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பாஜக கடந்த காலங்களில் போன் கால் மூலமாக உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தியது போன்று தான் தற்போது முன்மொழி கொள்கைக்கு ஆதரவு வேண்டி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்
பொதுமக்கள் யாரும் நிம்மதிக் கொள்கைக்கு ஆதரவு தெளிக்கவில்லை. பொதுமக்கள் மாணவர்கள் தமிழ் பற்றுள்ள ஒவ்வொருவரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்பிக்கை உள்ளது
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை பாஜக தற்போதும் நோட்டாவோட போட்டி போடும் கட்சி தான். மற்ற கட்சிகளோடு சேர்ந்து தான் பெற்றுள்ளனர் தமிழகத்தில் பாஜக என்றைக்கும் காலூன்ற முடியாது. கூட்டணிக் கட்சிகளோடு நின்றால் பாஜக 4 இடங்களில் வாக்குகளை பெற முடிகிறது
அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எங்களை சோதனை செய்து கொள்ளலாம். யாரு மீது வேண்டுமானாலும் ஏவி விடலாம் சோதனை நடத்தலாம். இதற்கு உண்டான தக்க பதிலை நீதி மன்றத்தின் மூலமாக நாங்கள் நிரபுறாது என்று நிரூபிப்போம்.இதுவரை சோதனையில் எந்த விதமான ஆதாரமும் சிக்கவில்லை
டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே அமலாக்ககத்துறை சோதனை செய்து வருவது என்பது பழிவாங்கும் செயலாக தான் பார்க்கப்படுகிறது. சிலரை மட்டுமே காரணம் செய்து அவரது வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை செய்து வழக்குகளை பதிவு செய்து என்பது மிக மிகக் குறைவு. எதற்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். சொத்துக்களை முடக்கினால் நீதிமன்றத்தின் மூலமாக அந்த சொத்துக்களை நாங்கள் மீட்போம்.
தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாக பார்க்கவில்லை.தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை
2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தீர்மானிக்கின்ற சக்தியாக உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம் திமுகவிற்க அவ்வாறு கிடையாது
சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் ஏமாளிகள் அல்ல யார் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள் யார் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் இதெல்லாம் அவர்களுக்கு தெரியும்.
அவர்களுக்கு உண்மையான நண்பன் யார் அவர்களுக்கு என்றைக்குமே தோழமையோடு இருக்கக்கூடியவர்கள் யார் என்பது சிறுபான்மையின சமூக மக்களுக்கு நன்றாக தெரியும். அது திராவிட இயக்கங்களை தவிர அதுவும் திமுகவை தவிர எந்த கட்சியையும் நம்ப தயாராக இல்லை.
குட்கா வழக்கில் குற்ற பத்திரிக்கை முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரிடம் வழங்கப்பட்டுள்ளது இது இயற்கை தான் . முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள் அதற்காக தான் நாங்கள் நீதிமன்றத்தில் விரைவாக வழக்குகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் வாய்தா வாங்கிச் சென்றால் நாங்கள் என்ன செய்வது?
ஆளுநர் இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. புழல் சிறை சிறப்பாக செயல்படுகிறது என்று உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது ஒரு சிலர் சிறை துறை மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.நீதிமன்றமே பாராட்டியுள்ளது.
விமர்சனங்கள் வைப்பவர்கள் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. காமாலை கண்ணுக்கு எதைப் பார்த்தாலும் மஞ்சள் காமாலை அதான் தெரியும்
சிறையில் உள்ள கைதிகள் சிறப்பாக நடத்தப்பட்டு அவர்களுக்கு உணவுகள் தரமாக வழங்கப்பட்டு அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு அவர்கள் சிறைக்குள்ளையே சம்பளம் பெறும் அளவிற்கு நாங்கள் சிறைக் கைதிகளின் தரத்தை உயர்த்தியுள்ளோம்