ARTICLE AD BOX
ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை
மலையாள திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27 அன்று பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது.
இதையும் படியுங்க: கோலாகல ஆரம்பம்..!மொத்தம் 74 போட்டிகள்..65 நாட்கள்..IPL 2025 முழு லிஸ்ட் இதோ.!
இப்படத்தை பிரபல நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியிருக்கிறார்.இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.IMAX தரத்தில் வெளியிடப்படும் முதல் மலையாள திரைப்படம் என்பதால்,ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்,சமீபத்தில் YouTube நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிருத்விராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டனர்,அப்போது பிருத்விராஜ் கூறியது,இந்தப் படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை,இது ஒரு மிகப்பெரிய விஷயம்,ஒரு சில நடிகர்கள் மட்டுமே தற்போது இப்போது இருக்கிறார்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகள் பல கோடிகளை சம்பளமாக வாங்கும் பட்சத்தில்,பிரித்விராஜ் மோகன்லால் பற்றி கூறியுள்ள தகவல் தமிழ் சினிமா பிரபலங்களை தாக்கியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எம்புரான் படத்தில் 100 கோடி பட்ஜெட்டில்,80 கோடியை நடிகர்களுக்காக செலவழிக்காமல்,முழுவதுமாக படத்தின் தரத்திற்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
