ARTICLE AD BOX
வெளியானது GBU
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில் காலை முதல் காட்சி மிகப்பெரிய ஓப்பனிங்கோடு தொடங்கியது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, UK போன்ற பல நாடுகளிலும் இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி காட்சி முதல் காட்சியாக தொடங்கியது. எனினும் பல நாடுகளில் 9 மணி காட்சிக்கு முன்பே முதல் காட்சி தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இலங்கையில் படம் பார்த்த தமிழர்கள் இத்திரைப்படத்தை குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

எரிச்சல் ஆகுது
படம் பார்த்த வெளிவந்த ரசிகர் ஒருவர், “படம் எடுத்ததே எனக்கு பிடிக்கவில்லை. ஒரு ஸ்திரமான கதை படத்தில் இல்லை. ஒப்பேத்தலாம் என்று படமெடுத்து வைத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமூக வலைத்தள கண்டென்ட்டுகள், அஜித்தின் பழைய திரைப்படங்களை மட்டும் வைத்து படத்தை கொண்டுபோயிருக்கிறார்கள். அதை நாங்கள் எதிர்பார்த்தோம் என்றாலும் கதை ஸ்ட்ராங்காக இல்லை. Theatre Experience-ம் பெரிதாக இல்லை” என கருத்து தெரிவித்தார்.
படம் பார்த்த மற்றொரு ரசிகர் கூறுகையில், “படத்தில் ஜிவி பிரகாஷ் போட்டது இரண்டு பாடல்கள்தான். மற்றது எல்லாமே பழைய பாடல்கள்தான். சகலகலா வல்லவன் பாடல் பின்னணியில் வந்தது. அது இந்த படத்திற்கு அஜித்திற்குமே சம்பந்தம் இல்லை” என கருத்து தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய வேறொரு ரசிகர், “படம் முதல் பாதி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டாம் பாதி ஓகே. தலயோட விஷுவலுக்காக பார்க்கலாம். அஜித்தின் பழைய படத்துடைய ரெஃப்ரன்ஸுகள் அதிகமாக வர வர ஒரு கட்டத்தில் எரிச்சல் ஆகிவிடுகிறது. இதை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்துருக்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.