ARTICLE AD BOX
திடீர் சந்திப்பு
திருவள்ளூர் மாவட்டம் அய்யர்கண்டிகை என்னும் இடத்தில் ஏ ஆர் ரஹ்மானுக்குச் சொந்தமாக ஒரு பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பாஜக இணையமைச்சர் அந்த பிரம்மாண்ட ஸ்டூடியோவில் வைத்து ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்தார். கிட்டத்தட்ட 7.10 மணி வரை இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன் நடிகை மீனா குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்காரை நேரில் சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது. நடிகை மீனா பாஜகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் பாஜக இணையமைச்சர் எல் முருகன் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்தது பலரின் கவனத்தை குவித்துள்ளது.

என்ன காரணம்?
இந்த நிலையில் எல் முருகன் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தது குறித்த காரணம் குறித்து முதற்கட்ட தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசால் ஒருங்கிணைக்கப்பட்ட Waves என்ற பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் “சத்யம் சிவம் சுந்தரம்” எனும் மியூசிக் வீடியோ ஒன்றிற்கு இசையமைத்திருந்தார். இதற்கான மரியாதை நிமித்தமாக எல் முருகன், ஏ ஆர் ரஹ்மானை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது.