ARTICLE AD BOX
இன்ஸ்டா பிரபலம்
இன்ஸ்டாகிராம் செயலியில் வித விதமாக கவர்ச்சியை காட்டும் வகையில் ரீல்ஸ் போட்டு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர் இலக்கியா. இந்த நிலையில் அவர் அதிகளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டதால் போரூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
முதலில் அவர் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இலக்கியா அளவுக்கதிகமாக ஊட்டச்சத்து மருந்துகளை சாப்பிட்டிருக்கிறார், அதுமட்டுமல்லாது மதுவும் அருந்தியிருக்கிறார் என்பது அப்பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சாவுக்கு பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன்தான் காரணம் எனவும் அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் பதிவிட்டு இருந்தார். இதற்கு அடுத்த நாளான இன்று அவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக செய்திகள் வலம் வருகின்றன.
இலக்கியா மறுப்பு
இந்த நிலையில் யூட்யூபர் இலக்கியா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் “அனைத்து செய்திகளும் பொய்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அவர் அதிக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. இதில் எது உண்மை என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
