எஸ்பி வேலுமணியை கொல்லுவோம்.. தேதியோடு வந்த மிரட்டல் கடிதம் : கோவையில் பரபரப்பு!!

1 month ago 34
ARTICLE AD BOX

அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்து உள்ளது.

இதையும் படியுங்க: உல்லாச உறவில் இருந்து விலகிய கள்ளக்காதலி ஓட ஓட விரட்டிக் கொலை : கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு!

இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடிதத்தில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மூன்று மாதங்களுக்குள் எஸ்.பி.வேலுமணியின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப்பட்டு உள்ளது.

We will kill SP Velumani on July 30th.. Threat through letter!

இந்த மிரட்டல் கடிதம் அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக கோவை மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன், மற்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து புகார் மனுவை அளித்தார்.

காவல்துறை இந்த மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடத்தி, மிரட்டல் விடுத்தவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.கவினர் வலியுறுத்தி உள்ளனர்.

  • vijay sethupathi starring ace movie audience review for first show முதல் பாதியே இப்படி ஆமை மாதிரி நகருதே- ரசிகர்களை புலம்பவைத்த விஜய் சேதுபதியின் Ace! 
  • Continue Reading

    Read Entire Article