ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி..அதிர்ச்சியில் திரையுலகம்.!

1 month ago 24
ARTICLE AD BOX

ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படியுங்க: ‘இந்தி’ திணிப்பை எதிர்க்கிறேன்…பல்டி அடித்த பவன் கல்யாண்.!

இந்திய சினிமாவின் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கி வரும் ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்,இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களை உருவாக்கியவர்.இவருக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளனர்.

இந்நிலையில்,திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து,சென்னை கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் அவருக்கு உடனடி பரிசோதனைகளை மேற்கொண்டு,ஆஞ்சியோ சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நிலைக்கு எந்தவிதமான அபாயமும் இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

  • ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி..அதிர்ச்சியில் திரையுலகம்.!
  • Continue Reading

    Read Entire Article