ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

1 week ago 20
ARTICLE AD BOX

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக திறந்து வைத்தார்

இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக பழைய அரசு பள்ளி கட்டிடத்தில் இயங்க உள்ள கல்லூரியினை தமிழக நீர் வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி,சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன்,பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க: அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

இதில் அமைச்சர் துரைமுருகன் கல்லூரியினை துவங்கி வைத்து பேசுகையில்
இந்த தொகுதி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை கல்லூரி தேவை என பல முறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து இன்று தான் முதல்வர் திறந்து வைக்கிறார் அதனை பயன்படுத்திகொள்ள வேண்டும்.

மேலும் இங்கு ஒரு மருத்துவமனை தேவை என கோரிக்கை வைத்தீர்கள் 100 படுக்கைகளுடன் மருத்துவமனையை துவங்க முதல்வரிடம் சொல்லி கொண்டு வருவேன் என பேசினார்.

அமைச்சர் பேசி கொண்டிருக்கும் போதே கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கூட்டணி கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தி வேகவேகமாக மேடைக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் பேசி முடித்த பின்னர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பேச சொன்னதால் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி பேசுகையில் , கல்லூரி துவங்குவதாக வாக்குறுதி கொடுத்தேன் துவங்கப்பட்டது மருத்துவமனை கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டு வருகிறேன். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமிழக அரசிடம் சலுகைகளை பெற தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் தமிழக நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவாக பரதராமி பகுதியில் வணிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோன்று மாங்காய் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர் ஆகவே தமிழக அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஏதாவது ஒரு நடவடிக்கை எடுப்பார்கள்”*என்று ஒரே வரியில் பதில் அளித்துவிட்டு சென்றார் அமைச்சர் துரைமுருகன்.

  • jana nayagan over takes Coolie movie in overseas business கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!
  • Continue Reading

    Read Entire Article