ARTICLE AD BOX
பொதுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை.

ஒரு பொதுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு.
திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்சப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.