ARTICLE AD BOX
வம்பில் மாட்டிக்கொண்ட வாட்டர் மிலன் ஸ்டார்
கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீல்ஸாக ரீகிரியேட் செய்து பிரபலமானவர்தான் திவாகர். ஆதலால் இவர் வாட்டர் மிலன் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் பல பேட்டிகளில் தனது நடிப்பு திறமை மிகவும் அபாரமானது என அவரையே அவர் பாராட்டி பேசிக்கொள்வார். தனக்கு அதிக ரசிகர்கள் இருப்பதாகவும் அடிக்கடி கூறிக்கொள்வார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் “சூரியை போல் சின்ன சம்பளத்தில் எல்லாம் நடிக்க முடியாது, என்னுடையே ரேஞ்சே வேற” என்று கூறியது ரசிகர்கள் பலரையும் கடுப்பிற்குள்ளாக்கியது.

“கருப்பு” படத்தில் சூர்யா தர்பூசணி காட்சியை ரீகிரியேட் செய்திருந்த காட்சித்துணுக்கு அத்திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் தர்பூசணி சாப்பிடுவதை சூர்யா “கருப்பு” படத்தில் ரீகிரியேட் செய்துள்ளதாக திவாகர் பகிர்ந்திருந்தது சூர்யா ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.
கிழித்து தொங்கவிட்ட ஜிபி முத்து
இந்த நிலையில் ஜிபி முத்து தனது வீடியோ ஒன்றில் திவாகரை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். “நாங்கள் எல்லாம் டிக் டாக், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய தளங்களில் மிகவும் கஷ்டப்பட்டு பல வசைகளை எல்லாம் கடந்து வந்தோம். இப்போதுதான் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
எரும மாட்டு பயலே, உன்னால் எங்களையும் ஏசி பேசுகிறார்கள், பேதில போகிறவனே. இவனை போன்ற ஆட்களை எல்லாம் சும்மா விட்டால் நம்மை எதிர்த்து பேசுவார்கள், அதனால்தான் இந்த கிழி கிழிக்கிறேன், இல்லை என்றால் உன்னை எட்டி கூட பார்க்கமாட்டேன். சூர்யா ரசிகர்களும், சூரி ரசிகர்களும் ஏன் சும்மா இருக்கிறீர்கள், அவனை நீங்களும் ஏசுங்கள், மற்ற விஷயங்களுக்கு மட்டும் வாயை திறக்கிறீர்கள். இதில் மட்டும் ஏன் அமைதியாக இருக்கீறீர்கள்?” என கேள்வி ஜிபி முத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அதில், “அவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள். அவன் என் கையில் சிக்கினால் நானே செருப்பால் அடித்து துரத்திவிடுவேன்” என மிகவும் காட்டமாக பேசியுள்ளார். இவரது வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
