ARTICLE AD BOX
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “தலைவன் தலைவி”. இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோருடன் யோகி பாபு, ரோஷினி ஹரிபிரியன், தீபா ஷங்கர், மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய ஒரு குடும்ப நகைச்சுவை திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது குடும்பத்துடன் பார்க்க கூடிய சிறந்த என்டெர்டெயினர் எனவும் புதிதாக திருமணம் ஆனவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் எனவும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 பாக்ஸ் ஆஃபிஸில் அமோக வெற்றி!
“தலைவி தலைவி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் இத்திரைப்படம் ரூ.4.15 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூ.3 கோடிக்கு வசூலாகியுள்ளதாம். இதற்கு முன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “ஏஸ்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ1 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த முறை பந்தயம் அடித்துள்ளார் விஜய் சேதுபதி.
 
                        3 months ago
                                46
                    








                        English (US)  ·