ARTICLE AD BOX
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம் பார்க்க உள்ளன. இதனால் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
Infosys, TCS, Persistent Systems போன்ற ஐடி நிறுவனங்களின் பங்குகள் இன்று 4% வரை சரிந்துள்ளன. வர்த்தகப் போரால் இந்தியாவில் உள்ள ஐடி துறைகளுக்கு கடும் வீழ்ச்சி தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்க: ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் : வழக்கறிஞரின் பரபரப்பு காட்சி!
இதனால் ஐடி துறைகளில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 10 ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்துள்ளதால், 81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இன்று நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 3% சரிவை சந்துள்ளது. Infosys 3.36% சரிந்து ஒரு பங்கிற்கு ரூ.1,517.85 ஆக சரிந்துள்ளது. பெரிய நிறுவனங்களான TCS மற்றும் WIPRO நிறுவனங்கள் 2% வரை சரிந்துள்ளன.

அமெரிக்க அதிபர் விதித்த வரி மற்றும் விசா குடியேற்ற கொள்கைகளால் TCS மற்றும் Infosys நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படாலம் என மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதை சரிக்கட்ட, இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களயே பணியமர்த்த வாய்ப்புள்ளது என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தக போர் காரணமாக பல துறைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஐடி சேவைகளை பயன்படுத்தும் பல நிறுவனங்கள் செலவை கட்டுப்படுத்த ஐடி சேவைகளுக்கு செலவு செய்வதை குறைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வர்த்தக போரால் இனி வரும் நாட்களில் கடும் சரிவை ஐடி நிறுவனங்கள் சந்திக்கக்கூடும். அதே சமயம் ஐடி ஊழியர்கள் பலர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என கூறுகின்றனர்,.
