ஐடி ரைடில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா..கை விரித்த நீதிமன்றம்..முடிவு யார் கையில்.!

2 weeks ago 8
ARTICLE AD BOX

வருமான வரி செலுத்த தவறிய எஸ் ஜே சூர்யா

தமிழ் சினிமாவில் பலர் இயக்குனராக அறிமுகம் ஆகி பின்பு ஹீரோவாக அடியெடுத்து வைத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்,அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் எஸ் ஜே சூர்யா தற்போது அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று வருமானவரித்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையும் படியுங்க: சோபிதா வெளியிட்ட போட்டோ…நாக சைதன்யாவிற்கு இப்படி ஒரு திறமையா.!

நடிகர் எஸ் ஜே சூர்யா முதன்முதலில் அஜித்தை வைத்து வாலி படத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்,அப்போது எஸ் ஜே சூர்யா காலில் செருப்பு கூட போடாமல் இருந்துள்ளார்,அதனைப்பார்த்த அஜித் அவருக்கு செருப்பும் ஒரு காரும் பரிசாக அளித்துள்ளார்,இப்படி தன்னுடைய ஆரம்ப காலத்தில் ரொம்ப வறுமையில் இருந்த எஸ் ஜே சூர்யா அடுத்தடுத்து முக்கிய ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கி வெற்றியை ருசித்தார்.

SJ Suryah tax evasion case

அதனை தொடர்ந்து படங்கள் இயக்குவதை தவிர்த்து நடிப்பு பக்கம் திரும்பினார்,ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் ஏதும் கைகொடுக்காத நிலையில் வில்லன் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார்,தொடர்ந்து பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து அசத்திய இவருக்கு மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்தது மட்டுமில்லாமல் அவருடைய சம்பளமும் அதிகரித்தது.

இந்த நிலையில் தான் தான் எஸ் ஜே சூர்யா தான் ஈட்டிய வருமானத்திற்கு அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய 7 கோடியே 57 லட்சம் ரூபாயை அரசாங்கத்திற்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது,இதனால் வருமானத்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது,இந்த வழக்கை எதிர்த்து உச்சநீதிதிமன்றத்தில் எஸ் ஜே சூர்யாவின் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு 467 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்,இதனால் எஸ் ஜே சூர்யா என்ன செய்வது என தெரியாமல் ஐடி ரைடில் சிக்கி தவித்து வருகிறார் .

  • SJ Suryah income tax issue ஐடி ரைடில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா..கை விரித்த நீதிமன்றம்..முடிவு யார் கையில்.!
  • Continue Reading

    Read Entire Article