ARTICLE AD BOX
கார் ரேஸில் ஈடுபாடு
நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற 24 ஹவர் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அஜித்குமார் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
திடீர் விபத்து
இந்த நிலையில் தற்போது அஜித்குமார் பெல்ஜியம் நாட்டில் பந்தயத்திற்காக பயிற்சி பெற்று வருகிறார். அப்போது அந்த பயிற்சியில் அஜித்குமாரின் கார் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கியது. இச்செய்தி வெளிவந்த சில நிமிடங்களில் அஜித்குமாரின் வீடியோ ஒன்று வெளிவந்தது. இதில் அஜித்குமார் நடப்பதற்கே சிரமப்படுவதாக தெரிய வருகிறது. எனினும் பெரிய காயம் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

6 months ago
75









English (US) ·