ஒரு சட்டைக்காக இவ்வளவு அக்கப்போரா? திடீரென நின்றுபோன சூர்யா 45 படப்பிடிப்பு…

1 month ago 32
ARTICLE AD BOX

வேட்டை கருப்பு

நடிகர் சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் இவர்களுடன் ஷிவதா, சுவாஸிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இத்திரைப்படம் கருப்பசாமி கதையை மையமாக வைத்து உருவாகி வருவதாக தெரிய வருகிறது. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு “வேட்டை கருப்பு” என்று பெயர் வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து…

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்று வருகிறதாம். இந்த நிலையில் ஒரு நாள் நடிகர்கள் அணியக்கூடிய  உடைகள் சரியாக அமையவில்லையாம். இதன் காரணமாக ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பை ரத்து செய்து வைத்திருந்தார்களாம். 

உடைகளை தயார் செய்ய ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஆடை வடிவமைப்பாளர்கள் தையல் கலைஞர்கள் கொண்ட ஒரு குழு எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். அப்படி இருந்தும் ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • I fell at my father Sathyaraj's feet and cried Says Divya அப்பா சத்யராஜ் காலில் விழுந்து கெஞ்சி அழுதேன்… காதலுக்காக போராடுங்கள் என திவ்யா உருக்கம்!
  • Continue Reading

    Read Entire Article