ARTICLE AD BOX
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது
இது குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
இதையும் படியுங்க: தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.
2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! என தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைஇ, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும்.
தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை விட, முதலமைச்சருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை. ஏனென்றால், அது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் வாக்குறுதி.
ஆனால், முதலமைச்சருக்கு, தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? இதே மதுரையில், வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக சொல்லி, ஆண்டுகள் நான்கு ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. முதல் செங்கலை நாங்கள் தருகிறோம். எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதலமைச்சருக்குத் திராணி இருக்கிறதா?